புவனேஷ் குமார் மிரட்டல் பந்து வீச்சு: வலுவான நிலையில் இந்தியா!


Caston| Last Modified சனி, 13 ஆகஸ்ட் 2016 (10:45 IST)
இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புவனேஷ் குமாரின் அசத்தலான பந்துவீச்சால் இந்திய வலுவான நிலையில் உள்ளது.

 
 
முதல் இன்னிங்சில் 353 ரன்கள் குவித்தது இந்திய அணி. இதனையடுத்து களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய புவனேஷ் குமார் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார்.
 
23.4 ஓவர்களை வீசிய புவனேஷ் குமார் 33 ரன்கள் கொடுத்து 10 மெயிடன் ஓவர்களை வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் ஆடிவந்த மேற்கிந்திய தீவுகள் அணியை குறைந்த ரன்னில் கட்டுப்படுத்த புனேஷ் குமார் உதவினார்.
 
இதன் பின்னர் 128 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து, 285 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ரஹானே 51 ரன்னுடனும், ரோஹித் சர்மா 41 ரன்னுடம் களத்தில் உள்ளனர்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :