வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2015 (16:22 IST)

இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; மீண்டும் இடம் பெற்றார் ஜடேஜா

தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாட இருக்கும் டெஸ்ட் போட்டிக்கான வீரர்களும், மீதமுள்ள 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், வரும் 22ஆம் தேதி நான்காவது ஒருநாள் போட்டியும், 25ஆம் தேதி ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.
 

 
ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்களில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் உமேஸ் யாதவ் நீக்கப்பட்டு ஸ்ரீநாத் அரவிந்த் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி முதல் 3 போட்டிகளில் விளையாடிய வீரர்களே உள்ளனர்.
 
அதேபோல், தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாடவிருக்கும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத ஜடேஜா மீண்டும் இடம் பெற்றார்.
 
டெஸ்ட் அணி விவரம்:
 
விராட் கோலி [கேப்டன்], முரளி விஜய், ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா, சத்தீஸ்வர் புஜாரா, அஜிங்கே ரஹானே,  ரவீந்திர ஜடோஜா, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, புவனேஸ்குமார், லோகேஷ் ராகுல், மொஹிந்த் சர்மா, அஸ்வின்.