Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்திய வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை; வழிவிடாத பிசிசிஐ மீது நடவடிக்கை

Indian Cricketers
Abimukatheesh| Last Updated: சனி, 11 நவம்பர் 2017 (13:45 IST)
தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் ஒழுங்கு முறையை ஏற்க மறுப்பு தெரிவித்ததையடுத்து பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்க போவதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

 

 
தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு விளையாட்டுகளில் வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொண்டு பங்கேற்பதை தடுக்க பல விதிமுறைகளை விதித்துள்ளது. வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தி தகுதி அளிக்கும் பணியை செய்து வருகிறது. அனைத்து விளையாட்டுகளின் அமைப்புகளும் இந்த ஒழுங்கு முறையை பின்பற்றி வருகின்றன.
 
ஆனால், பிசிசிஐ மட்டும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் ஒழுங்கு முறையை ஏற்க மறுத்துள்ளது. பிசிசிஐ நடத்தும் ஊக்க மருந்து சோதனை நம்பகத்தன்மை வாய்ந்ததுதான் என்றும், பிசிசிஐ அரசுசார் அமைப்பு அல்ல எனவே தனியாக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் சோதனை தேவையில்லை என பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி தெரிவித்துள்ளார்.
 
பிசிசிஐ மறுப்பு தெரிவித்தையடுத்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :