வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 1 மே 2016 (20:01 IST)

அக்ஷர் படேல் அபாரம்: இந்த ஐபிஎல் தொடரின் முதல் ஹாட்ரிக் விக்கெட்

குஜராத் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.


 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ரெய்னா தலைமையிலான குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முரளி விஜய் 55 ரன் எடுத்தார்.
 
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 131 ரன் எடுத்து 9 விக்கெட்டை இழந்து தோல்வியை தழுவியது.
 
இதில் 7-வது ஓவரை வீச வந்த பஞ்சாப் வீரர் அக்ஷர் படேல் 6.5வது ஓவரில் தினேஷ் கார்த்திக்கை முதலில் அவுட்டாக்கினார். அடுத்த பந்தில் பிராவோவை போல்டாக்கினார். அதன் பின்னர் 11-வது ஓவரை வீச வந்தார் படேல் 11-வது ஓவரின் முதல் பந்தில் ஜடேஜாவை வெளியேற்றி ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார்.
 
இதன் மூலம் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை பெற்றார் அக்ஷர் படேல். இந்த போட்டியில் அக்ஷர் போட்டியில் 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.