வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (12:50 IST)

189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன தென்னாப்பிரிக்கா.. 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய க்ரீன்!

sa vs aus
189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன தென்னாப்பிரிக்கா.. 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய க்ரீன்!
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
அந்த அணி 68 ஓவர்களில் 189 ரன்களுக்கு அவுட் ஆனது. தென்னாபிரிக்க அணியின் கிலே வெரின்னி மற்றும் மார்கோ ஜேன்சன் ஆகிய இருவர் மட்டுமே அரை சதங்கள் அடித்துள்ளார் என்பதும் கிட்டத்தட்ட மற்ற அனைத்து வீரர்களும் குறைந்த ரன்களில் அவுட் ஆகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஆஸ்திரேலிய அணியின் க்ரின் மிக அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் அவர் வெறும் 27 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறார்கள். 7வது ஓவரிலேயே உஸ்மான் கவாஜா விக்கெட் வீழ்ந்துவிட்ட நிலையில் ஆஸ்திரேலிய தற்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது என்பதும், டேவிட் வார்னர் 32 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran