வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : புதன், 26 நவம்பர் 2014 (03:45 IST)

பந்து தாக்கியதால் ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் கவலைக்கிடம்

பந்து பவுன்ஸ் ஆகியதன் விளைவால் ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் – தெற்கு ஆஸ்திரேலிய ஆகிய அணிகள் மோதிய ஆட்டம் நவ, 25 இன்று நடைபெற்றது.

இதில் முன்னணி வீரரான ஹியூக்ஸ், பந்து பவுன்ஸ் ஆனதால் படுகாயம் அடைந்தார். மேலும் பவுன்சர் பந்து அவரது தலையை தாக்கி பதம் பார்த்தது. இதனால் அவர் சுயநினைவை இழந்து கீழே விழுந்தார். உடனே ஹியூக்ஸ் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் களத்தில் இருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றதால், ஆட்டம் நிறுத்தப்பட்டது.