Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐசிசி தரவரிசையில் முதல் 2 இடங்களை பிடித்த அஸ்வின், ஜடேஜா

Abimukatheesh| Last Updated: புதன், 21 டிசம்பர் 2016 (21:10 IST)
2016ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியிலில் இந்தியாவைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா முதல் இரண்டு பிடித்துள்ளனர்.2016 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் மற்றும் நாடுகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிக்கான அணிகள் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மென்கள் தரவரிசை பட்டியலில் இந்திய டெஸ்ட் போட்டி அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் அஸ்வின் முதலிடத்தையும், ஜடேஜா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான அணிகள் தரவரிசை பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா முதலிடத்திலும், தென் ஆப்பரிக்க இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மென்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் அக்‌ஷர் பட்டேல் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :