ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 15 ஜனவரி 2024 (12:37 IST)

ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு அஸ்வின் சரிபட்டு வரமாட்டார்- பிரபல வீரர் ஓபன் டாக்!

சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி இன்று விளையாடும் கிரிக்கெட்டர்களில் முக்கியமான ஒருவராக இருந்து வருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்திய பவுலர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

அஸ்வின் மிகச்சிறந்த வீரராக இருந்தாலும், அவருக்கு ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரில் அவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அஸ்வின் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சரியான வீரர் இல்லை என முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். அதில் “அஸ்வின் சிறந்த வீரர்தான்.ஆனால் அவர் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார்” எனக் கூறியுள்ளார்.