செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (14:02 IST)

வெளிநாடுகளில் நான் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்… WTC பைனலில் இடம்பெறாதது குறித்து அஸ்வின் வேதனை!

சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாதது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இப்போது முதல் முறையாக அதுபற்றி பேசியுள்ளார் அஸ்வின்.

ஒரு நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் ”நான் இறுதிப் போட்டியில் விளையாட விரும்பினேன், ஏனென்றால் நாங்கள் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன். கடந்த இறுதிப் போட்டியில் கூட நான் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினேன், சிறப்பாக பந்துவீசினேன்,

2018-19 முதல், எனது வெளிநாட்டு பந்துவீச்சு அற்புதமாக இருந்தது, மேலும் நான் அணிக்காக கேம்களை வெல்ல முடிந்தது.  போட்டி தொடங்கும் 48 மணி நேரத்திற்கு முன்பே நான் அணியில் இருக்க மாட்டேன் என்பது எனக்கு தெரியவந்தது.

எனவே என்னைப் பொறுத்தவரை, எனது முழு இலக்காக நான் வீரர்களுக்கு உதவியாக இருப்பதை உறுதிசெய்து, பட்டத்தை வெல்ல உதவ வேண்டும் என நினைத்திருந்தேன். ஏனெனில் அணியில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன்." என்று அஷ்வின் கூறினார்.