இங்கிலாந்துக்கு எதிராக இந்த சாதனையை செய்த ஒரே இந்திய வீரர் அஸ்வின்தான்… !
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்து ஜாம்பவான் அஸ்வின் தனது 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.
இதையடுத்து தற்போது ராஞ்சியில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட்டில் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இது இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அவர் வீழ்த்தும் 100 ஆவது விக்கெட் ஆகும். அதே போல அவர் இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை சேர்த்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கெதிராக 100 விக்கெட்கள் மற்றும் 1000 ரன்கள் சேர்த்துள்ள ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை கேரி சோபர்ஸ், ஆஸ்திரேலியாவின் நோபில் மற்றும் ஆஸ்திரேலியாவின் கிப்பின் ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.