திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 7 நவம்பர் 2023 (08:49 IST)

திருப்பிக் கொடுத்த மேத்யூஸ்… ஷகீப் விக்கெட்டை எடுத்தபின் செய்த செயல்!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ்  பேட் செய்ய தாமதமாக வந்ததால் அவரை டைம்ட் அவுட் முறையில் விக்கெட்டுக்கு அப்பீல் செய்தனர் வங்கதேச வீரர்கள். அதை ஏற்ற நடுவர்கள் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக Timed Out முறையில் மேத்யூஸை அவுட் என அறிவித்தனர்.

இது இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்தால் போட்டி முடிந்ததும் பங்களாதேஷ் மற்றும் இலங்கை வீரர்கள் போட்டி முடிந்ததும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் பேட் செய்யும் போது கேப்டன் ஷகிப் அல் ஹசனின் விக்கெட்டை வீழ்த்திய ஏஞ்சலோ மேத்யூஸ் தன்னுடைய கையைக் காட்டி “இது நீங்கள் வெளியேற வேண்டிய நேரம் (டைம் அவுட்)” என பதிலடி கொடுக்கும் விதமாக நடந்துகொண்டார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.