வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 19 ஜூலை 2016 (03:15 IST)

அதிவேக இரட்டை சதம் : 31 ஆண்டுகளுக்குப் பிறகு ரவி சாஸ்திரி சாதனை சமன்

முதல் தர போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்த ரவி சாஸ்திரி சாதனையை, இங்கிலாந்து வீரர் 31 ஆண்டுகளுக்குப் பிறகு சமன் செய்துள்ளார்.
 

 
இங்கிலாந்தில் ‘கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன்-2’ முதல் தர கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் கொண்ட இந்த தொடரின் ஒரு போட்டியில் கிளமோர்கன் - டெர்பிஷைர் அணிகள் மோதின.
 
இதில் அந்த அணியின் அனேயரின் டொனால்ட் Aneurin Donald [19] 80 பந்தில் 15 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து விளையாடிய டொனால்ட், அடுத்த 43 பந்தில் மேற்கொண்டு 100 ரன்களை சேர்த்தார்.
 
மொத்தத்தில் தான் சந்தித்த 123 பந்தில் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் முதல்தர போட்டிகளில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர்களில் ரவி சாஸ்திரியுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.
 
முன்னதாக, 1985-ம் ஆண்டு இந்தியாவின் ரவி சாஸ்திரி முதல் தர போட்டியில் 123 பந்தில் இரட்டை சதம் அடித்தார். இதுதான், முதல் தர போட்டியி்ல் அதிவேக இரட்டை சதமாக இதுவரை இருந்து வந்தது.
 
தொடர்ந்து விளையாடிய அவர் 136 பந்தில் 26 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 234 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தார். குறிப்பாக டொனால்ட் 100, 150 மற்றும் 200 ஆகியவற்றை சிக்ஸ் அடித்து கடந்தது குறிப்பிடத்தக்கது.