1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2023 (07:25 IST)

இலங்கையை மிக எளிதாக வீழ்த்திய ஆப்கானிஸ்தான்… புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் ஆப்கன் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே சேர்த்தது.  அந்த அணியில் ஒரு வீரர் கூட நிலைத்து நின்று அரைசதம் அடிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் சார்பாக பரூகி அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதன் பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டினர். ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகீதி,  அஸ்மத்துல்லா ஓமரசி ஆகிய மூவரும் அரைசதம் அடித்து வெற்றிகு உறுதுணையாக இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.