1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (22:11 IST)

கோலிக்கு ஒரு விதி...நடராஜனுக்கு ஒரு விதியா? முன்னாள் வீரர் விமர்சனம்

natarajan


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இந்திய அணியினர் ஒருநாள் தொடரை இழந்தாலும் டி-20 தொடரை வென்றது. தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.  இந்நிலையில் தனது குழந்தையின் பிறாப்புக்காக  டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகி, இந்தியா வந்துள்ள கேப்டன் கோலியை முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையான விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கட்டுரையில், ஆஸ்திரேலியா தொடரில் டி-20 தொடரில் நடராஜன் சிறப்பாக விளையாடினார். கடந்த ஐபிஎல் தொடரின் போதுதான் நடராஜன் முதல் குழந்தைக்குத் தந்தையானார்.

ஆனால் அவர் தன் குழந்தையைப் பார்க்க உடனடியாக நாடு திரும்பவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்து நேரடியாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆனால் விராட் கோலி தனது முதல் குழந்தை பிறாப்புக்காக இந்தியா திரும்புகிறார். இதில் கோலிக்கு ஒரு விதி, நடராஜனுக்கு ஒரு விதி என்று பிசிசிஐ-ன் விதி உள்ளது எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.