வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 நவம்பர் 2023 (18:18 IST)

அம்பத்தி ராயுடு உள்பட 8 வீரர்கள் விடுவிப்பு! – சிஎஸ்கே முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 8 வீரர்களை விடுத்துள்ளது.



ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற போட்டியாகும். தற்போது ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் உள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன்னரும் வீரர்கள் ஏலம் நடைபெறும். அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியிலிரிந்து சில வீரர்களை விடுவிப்பது வழக்கம்.

அவ்வாறாக நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை விடுவித்துள்ளது. அம்பத்தி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், டிவைன் ப்ரிட்டோரியஸ், பகத் வர்மா, சும்ரான்ஷூ சேனாபதி, கைல் ஜெமிசன், ஆகாஷ் சிங் மற்றும் சிசண்டா மகலா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அம்பத்தி ராயுடு கடந்த ஐபிஎல்லோடு ஓய்வு அறிவித்துவிட்டார். பென் ஸ்டோக்ஸ் கடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக ஒரு போட்டியில் மட்டும் விளையாடி காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு அறிவித்த அம்பத்தி ராயுடுவின் பெயரும் விடுவிப்பு பட்டியலில் உள்ள நிலையில் தோனி பெயர் இல்லாததால் அவர் ஓய்வு அறிவிக்கவில்லை என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Edit by Prasanth.K