வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (21:01 IST)

2ஆவது டி 20 - 92 ரன்களுக்குள் சுருண்டது இந்தியா

தென் ஆப்பிரிக்காவுடனான 2ஆவது டி 20 போட்டியில் இந்திய அணி 92 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது டி 20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன் இந்திய முதலில் பேட்டிங் செய்தது.
 
இந்திய அணி தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை சமாளிக்க தினறியது. தவான் 11 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
 

 
சிறிது நேரம் தாக்குப்பிடித்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 22 ரன்களில் ரன் அவுட் ஆனார். பின்னர், அம்பதி ராயுடு (0), தோனி (5) அடுத்தடுத்து வெளியேறினர். ரெய்னா 21 ரன்கள் எடுத்தார். முக்கிய வீரர்கள் வெளியேற 69 ரன்களுக்கு 7 விக்கெடுகளை இழந்து தத்தளித்தது.
 
பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய வீரர்களில் 4 பேர் டக் அவுட் ஆகி வெளியேறியது குறிப்பிடதக்கது.
 
தென் ஆப்பிரிக்க தரப்பில் கெய்ல் அப்போட், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.