வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 22 ஜனவரி 2019 (14:24 IST)

கிரிக்கெட்டில் 10 விக்கெட் கைப்பற்றி இந்திய வீரர் சாதனை ...

மணிப்பூர் கிரிக்கெர்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரெக்ஸ் சிங் என்ற வீரர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ரஞ்சி டிராஃப்பியில் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
மிக இளைய வீரராக கருதப்படும் ரெக்ஸ் சிங்க்கு தற்போது 18 வயதுதான் ஆகிறது. இடது கைப்பந்து வீச்சாளரான இவரது வேகத்திற்கு பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்பது அபூர்வமாகும்.
 
கடந்த பிஹார் டிராஃப்பியில் 10/11 விக்கெட் எடுத்து 9.5 ஓவரை மெய்டன் செய்திருக்கிறார்.ரெக்ஸ் தற்போது ரஞ்சி டிராஃப்பியில் முதன் முதலாக அறிமுகம் ஆகியிருக்கிறார். அதாவது மொத்தம் 15 விக்கெட்டுகளை இரண்டு இன்னிங்ஸிலும் எடுத்திருக்கிறார்.
இந்திய ஏ அணியில் இடம் பெற்றிருந்த இர்ஃபான் பதானின் சாதனையை ரெக்ஸ் சிங் ஞாபகப்படுத்துவதாக எல்லோரும் கூறிவருகிறார்கள்.
 
இவர் கூடிய விரைவில் இந்திய அணியில் இடம்  பிடித்தாலும் ஆச்சர்யமில்லை.