செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (17:04 IST)

பிரபல கிரிக்கெட் அணியின் இயக்குனர் ராஜினாமா !

Hamilton Masakadza
ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் இயக்குனர் ஹாமில்டர் மசகட்சா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
 
சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்காக டி20 உலகக் கோப்பை விரைவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான தகுதிச் சுற்றி   சமீபத்தில் நடைபெற்றது.
 
இதில், ஜிம்பாவே அணி தகுதிபெறவில்லை.  ஆப்பிரிக்கா பிராந்திய தகுதிச்சுற்றில் உகாண்டா மற்றும் நமீபியா அணிகளிடம் தோல்வியடைந்ததால் ஜிம்பாவே புள்ளிப்பட்டியலில்  3 வது இடம்பிடித்தது.
 
உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற  முதலிரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும். ஜிம்பாவே 3 வது இடத்தைப் பிடித்ததால் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெறவில்லை. 
 
அண்மையில் நடந்த போட்டிகளிலும் ஜிம்பாவே அணி சோபிக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில்,  கடந்த 4 ஆண்டுகளாக ஜிம்பாவே அணியின் இயக்குனராகப் பதவி வகித்து வந்த ஹாமில்டன்  மசகட்சா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.