வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. வீரர்கள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 11 நவம்பர் 2022 (17:20 IST)

“இந்திய வீரர்களை வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்”- கும்ப்ளே ஆதரவு!

ஐபிஎல் போல வெளிநாடுகளில் நடக்கும் டி 20 லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடுவதை பிசிசிஐ அனுமதிப்பதில்லை.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் டி20 சீசன் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த போட்டிகளில் 10 அணிகள் போட்டியிட்டு விளையாடி வருகின்றன. இந்த போட்டிகளை ஒளிபரப்புவதற்கான தொலைகாட்சி உரிமம் மற்றும் ஓடிடி உரிமங்கள் பேக்கேஜாக ஏலத்தில் விடப்படுகின்றன.

இந்த தொடரில் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொள்கின்றனர். ஆனால் இதேபோல வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்துகொள்வதை பிசிசிஐ அனுமதிப்பதில்லை. இதனால் சில வீரர்கள் முன்கூட்டியே ஓய்வை அறிவிக்கின்றனர்.

இந்நிலையியில் இந்திய அணி தற்போது டி 20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் முன்னாள் வீரர்களான ஸ்டீபன் பிளமிங், அனில் கும்ப்ளே மற்றும் டாம் மூடி ஆகியோர் கலந்துகொண்ட ஒரு விவாதத்தில் “இந்திய வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் கலந்துகொள்ள பிசிசிஐ அனுமதிக்க வேண்டும்” என பேசியுள்ளனர்.