நான் விவாகரத்து ஆனவள்னு எப்புடி சொல்றது? எல்லாத்தையும் டெலீட் செய்த பிரியங்கா!
விஜே பிரியங்கா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட எல்லா புகைப்படங்களை மியூட் செய்துள்ளார்!.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரும் பிரபலமடைந்தவர் விஜே பிரியங்கா.
நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி பாடல் பாடுவது , நடனமாடுவது உள்ளிட்ட பல கலைகளில் திறமை வாய்ந்தவர்.
இவர் தன்னுடன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
கடந்த சில வருடங்களாக விவாகரத்து வதந்திகள் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அது குறித்தோ கணவரை குறித்தோ எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தார் ப்ரியங்கா.
அவ்வப்போது வெளிநாடுகளுக்கு தனியாக சுற்றுலா செல்வதால் அவர் நிச்சயம் விவாகரத்து ஆனவர் தான் என முத்திரை குத்தப்பட்டார்.
இந்நிலையில் தன் கணவருடன் எடுத்து வெளியிட்ட போட்டோக்களை பிரியங்கா அமைதியாக டெலீட் மற்றும் மியூட் செய்துவிட்டதாக நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர்.