1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2019 (14:43 IST)

விஜய் ஆன்டனியின் “ தமிழரசன் “ பட புகைபடத்தொகுப்பு!

விஜய் ஆன்டனி பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் "தமிழரசன் " திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
 

 
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பிறகு நடிகராக திகழ்கிறார் விஜய் ஆன்டனி. 

 
இவர் பிரபல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத் துள்ளார்.இந்நிலையில் இவர் 2012-ம் ஆண்டு ஜீவா சங்கர் இயக்கத்தில் "நான் " திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகராக நடித்தார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 
பிறகு  "சலீம் " , "பிச்சைக்காரன் " , "அண்ணாதுரை " போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 
இந்நிலையில் விஜய் ஆன்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் "தமிழரசன் " திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

 
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியானது.

 
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கௌசல்யா ராணி அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறார். 

 
இந்தப் படத்தில் விஜய் ஆன்டனியுடன் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். 

 
ப்படத்தில், 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராடும் காட்சிக்கு அனல் தெறிக்க ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியிருப்பதாக ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு தெரிவித்திருக்கிறார். மேலும், இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரனவ் ராஜா, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.