1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (10:41 IST)

நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி நிதி விடுவிப்பு!

வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட தங்க நகைக் கடன் தள்ளுபடிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். 
 
அதன்படி, இதுவரை 5,48,000 கடன்களுக்கு தள்ளுபடி ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இது குறித்து விளக்கம் அளித்திருந்தார். வரும் 28 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி தொடர்பான ரசீதுகள் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.