கானா பாலாவின் ‌பிரபல பாட‌ல்க‌‌ள் - ஒரு தொகுப்பு

Gana Bala Hit Songs, கானா பாலா பாட‌ல்க‌ள்
ரவிவர்மா| Last Updated: வெள்ளி, 20 ஜூன் 2014 (17:19 IST)
கானா பாலா, தமிழ்த் திரையுலகில் உருவாகியுள்ள புதிய நட்சத்திரம். இசையமைப்பாளர் தேவாவின் கானா பாடல்களு‌‌க்கு‌ப் ‌பிறகு, கானா பாடல்களால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளார் கானா பாலா எனும் பால முருகன்.
 
2014 ஜூ‌ன் 20 ‌அன்று பிற‌ந்தநா‌ள் காணு‌ம் 45 வயதான கானா பாலாவின் பல பாடல்கள் பிரபலம் அடைந்துள்ளன.  
2012ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தில் இடம்பெற்ற ஆடி போனா ஆவணி, நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா பாடல்களால் பிரபலமானவர். 
 
2007 ஆம் ஆண்டே பிறகு என்ற படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவா இசையில் அனாதை பாலா என்ற பெயரில் 'பதினோரு பேரு ஆட்டம்', 'உன்னைப் போல பெண்ணை' என்ற பாடல்களையும், 2008 ஆம் ஆண்டு தொடக்கம் படத்தில் 'ஃபோனப் போட்டு' என்ற பாடலையும், வேதா படத்தில் 'சிக்கு புக்கு ரயிலு' என்ற பாடல்களையும் பாடியவர். 
 
இனி, அவர் பாடி பிரபலமான பாடல்களை இங்கே பார்ப்போம். 


இதில் மேலும் படிக்கவும் :