1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Mahalakshmi
Last Modified: சனி, 17 ஜனவரி 2015 (16:02 IST)

உங்கள் குழந்தை அரிசியை விரும்பிச் சாப்பிடுகிறதா?

ஐந்து அல்லது 6 வயதிற்கு மேல் உள்ள குழநதைகள் எப்போதும் அரிசியைத் தின்று கொண்டிருப்பதால் மஞ்சள் காமாலை வரும் என்று சில பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். ஆனால் இது உண்மையல்ல. அதேநேரம் இப்பழக்கம் ஆரோக்கியமானதும் இல்லை. 
 
அரிசியை மெல்லுவதால் பல சத்துக்குறைவு நோய்கள் ஏற்படும். எப்போதும் அரிசியை மென்று கொண்டிருந்தால் பசி குறைந்துவிடும். அரிசியில் மாவுச்சத்து ஒன்றுதான் பிரதானம். இதுமட்டும் உடல் வளர்ச்சிக்குப் போதாது. 
 
இதனால் ரத்த சோகை, பார்வைக் குறைபாடு, தோல் நோய்கள், புரதசத்து குறைவு நோய்கள், வைட்டமின் பற்றாக்குறை நோய்கள் என்று பல நோய்கள் குழந்தைகளைத் தாக்கும் என்பதால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.