திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Sasikala

கர்ப்பகாலத்தில் சாப்பிட கூடாத உணவுகள் என்ன தெரியுமா...?

கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் காஃபின் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும், மேலும் இது ஒரு நாளைக்கு 200 மி.கி.க்கு அப்பால் செல்லக்கூடாது. காஃபின் கருச்சிதைவுகளுக்கு வழிவகுக்கும் என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன.

கர்ப்பகாலத்தில் பச்சையான அல்லது பாதி வேகவைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிட கூடாது. இவற்றில் அதிக அளவில் பாக்ட்டீரியாக்கள் நிறைந்திருக்கும்.
 
மீனில் அதிக அளவு பாதரசம் நிறைந்திருப்பதால் மீன் சாப்பிடுவதை தவிர்க்கவும். இது உங்கள் குழந்தையின் மூளைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சேதத்தை ஏற்படுத்தும். எனவே, அத்தகைய மீன்களை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக சூரை, சுறா, வாள் மீன் மற்றும் டைல்ஃபிஷ் போன்றவற்றை தவிர்த்திடுங்கள்.
 
பச்சை முட்டை அல்லது பச்சை முட்டை கலந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள். அவை பாக்டீரியா தொற்றுகளில் ஒரு வகையான சால்மோனெல்லாவை  ஏற்படுத்தும்.
 
இயற்கையாய் கிடைக்கும் பாலை குடிப்பதே சிறந்தது. கடைகளில் கிடைப்பவற்றை தவிர்க்கவும்.
 
ஆல்ஹகாலை கர்ப்பகாலத்தில் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
 
குறிப்புகள்:
 
1. எப்போதும் பழங்கள் மற்றும் காய்களை சுத்தமாக கழுவிட்டு சாப்பிடுங்கள்.
 
2. உணவில் சில ஊட்டச்சத்துக்கள் மட்டும் இருக்கும் படி உண்ணாமல், அனைத்து ஊட்டச்சத்துக்களும் சம அளவில் கலந்த உணவை உண்ண வேண்டும்.
 
3. நொறுக்கு தீனிகளை தவிர்த்து, அதற்கு பதில் சர்க்கரை வள்ளி கிழங்கு, வீட்டில் செய்யப்பட்ட எளிமையான உணவுகள், பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை  சாப்பிடுங்கள்.
 
4. கண்டிப்பாக தண்ணீர் குடிக்க மறந்துவிடாதீர்கள்.