வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட்- 2017-18
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 11 ஜனவரி 2017 (18:35 IST)

5 மாநில தேர்தலால் மத்திய பட்ஜெட் தள்ளிப்போகுமா?

மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டை வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்போவதாக அறிவித்து உள்ளது.


 

அதே சமயம் உத்திரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்திரகண்ட் ஆகிய 5 மாநிலத்தில் சட்டசபை தேர்தல்கள் வருகின்ற பிப்ரவரி தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெறுகிறது.

5 மாநில தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி தேர்தல் முடிவு மாற வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

இதையடுத்து பிரதான எதிர்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் கமி‌ஷனை சந்தித்து பட்ஜெட் தேதியை தேர்தலுக்கு பிறகு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை அளித்துள்ளனர்.

இதனையடுத்து, மத்திய பட்ஜெட் தள்ளிப்போகலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் பட்ஜெட்டை தள்ளி வைக்க மாட்டோம் என்று மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.