வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட்- 2017-18
Written By Sasikala
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2017 (13:17 IST)

ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு 2017 பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு!

2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்து இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்தது.

 
பொது பட்ஜெட் முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்திருப்பதால் மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.
 
வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம். இந்தியாவை 
 
தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே அரசின் இலக்கு.
 
கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,17,000 கோடி (கடந்த ஆண்டு ரூ.87,765 கோடி). 
 
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2019ம் 
 
ஆண்டிற்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.
 
பயிர் காப்பீடு அளவு அதிகரிக்கப்படும். 13,240 கோடி பயிர் காப்பீடு வழங்கப்படும். 
 
விவசாயிகளுக்கு 60 நாட்கள் வட்டி தள்ளுபடி தொடரும். 
 
பெணிகளின் வளர்ச்சிக்காக கிராமங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். 100 நாள் வேலை திட்டத்துக்காக முன்பை விட 
 
அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
ஊரக, வேளாண் சார்ந்த துறைகளுக்கு 2017-18ல் ரூ.1,87,223 கோடி ஒதுக்கீடு.
 
விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு மூலம் ரூ.8000 கோடி வழங்கப்படும்.
 
கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்படும்.
 
சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
 
2018, மே ஒன்றாம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தப்படும்.
 
விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு. (கடந்த ஆண்டு சுமார் 9 லட்சம் கோடி).

வறட்சியை சமாளிக்க நாடு முழுவதும் ஐந்து லட்சம் குளங்கள் ஏற்படுத்தப்படும்.

 1.50 லட்சம் கிராமங்களில் இணையதள சேவை.

அனைத்து கிராமங்களிலும் 2018 மே 1க்குள் மின்வசதி.