பட்ஜெட் 2017 - ரயில்வே துறையில் முக்கிய அம்சங்கள்!
2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்து இன்று தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
புதிய மெட்ரோ ரயில் கொள்கை அறிவிக்கப்படும். இது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுக்கும் கொள்கையாக இருக்கும்.
பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு கூடுதல் சலுகைகளை அருண் ஜெட்லி அறிவித்தார். ரயில்வே திட்டங்களுக்கு ரூ.1.31 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு லட்சம் கோடி ரூபாயுடன், ரயில் பாதுகாப்பு நிதி அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
500 ரயில் நிலையங்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக மாற்றியமைக்கப்படும். லிஃப்ட்டுகள், எஸ்கலேட்டர்கள் இருக்கும்.
2019-ம் ஆண்டுவாக்கில், இந்திய ரயில்வேயின் அனைத்து ரயில்பெட்டிகளிலும் பயோ-டாய்லெட்டுகள் அமைக்கப்படும் என அருண் ஜெட்லி அறிவித்தார்.