வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Geetha Priya
Last Updated : செவ்வாய், 9 செப்டம்பர் 2014 (12:45 IST)

மிரட்டும் ஷாருக்கானின் எய்ட் பேக்ஸ்

இந்தியாவின் ஒவ்வொரு மொழியிலும் அரை டஜன் சிக்ஸ் பேக் ஹீரோக்களாவது இருக்கிறார்கள். இதுவே பத்து வருடங்களுக்கு முன்னால் விஜயகாந்த் மாதிரி அனைவருக்கும் சிங்கிள் பேக்தான். சல்மான் போன்ற ஒருசில விதிவிலக்குகள் மட்டுமே உண்டு.
இந்நிலையில் ஷாருக்கான் ஃபரா கானின் ஓம் சாந்தி ஓம் படத்தில் ஒரு பாடலுக்கு சிக்ஸ் பேக்கில் தோன்றி, திரையரங்குகளில் பெண்களை விசிலடிக்க வைத்தார். அதன் பிறகே இளைஞர்களிடம் சிக்ஸ் பேக் மோகம் பரவியது.
 

தற்போது அதே ஃபரா கானின் ஹேப்பி நியூ இயர் படத்தில் ஷாருக் நடித்து வருகிறார். 48 வயதாகும் இந்த நிலையிலும் கடும் உடற்பயிற்சியில் எய்ட் பேக்ஸ் வரவழைத்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட இரு எய்ட் பேக்ஸ் படங்களுக்கு பலத்த வரவேற்பு. இருபது வயது இளைஞர்கள் பொறாமைப்படுகிற மாதிரி இருக்கிறது அவரது தோற்றம். 
 
இந்தமுறையும் பெண்களின் கரகோஷத்தில் தியேட்டர்கள் திணறப் போகின்றன.