1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 31 ஜூலை 2014 (17:59 IST)

பணம் முக்கியம்தான்... ஆனால் படமும் முக்கியம்

இம்ரான் ஹஸ்மியின் ராஜா நட்வர்லால் படம் ஆகஸ்ட் 29 வெளியாகிறது. முந்தையப் படம் தோல்வியடைந்ததால் இதனைதான் அதிகம் நம்பியுள்ளார் இம்ரான் ஹஸ்மி. 
குணால் தேஸ்முக் இயக்கியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று இம்ரான் தெரிவித்துள்ளார். படங்களில் நடிப்பது குறித்த அவரது சமீபத்திய பேட்டி, இம்ரானின் நல்ல படங்கள் மீதான ஆர்வத்தை காட்டுகிறது.
 
பணத்துக்காகதான் நடிக்கிறேன். பணம்தான் மையப் பொருள். இலவசமாக கண்டிப்பாக நடிக்க மாட்டேன். அதேநேரம் பணமே எல்லாம் கிடையாது. வெறும் பணத்துக்காக மட்டும் ஒரு படத்தில் நடிக்க முடியாது. ஸ்கிரிப்டும் முக்கியம். ராஜா நட்வர்லால் அப்படியொரு படம் என கூறியுள்ளார்.
 
குணால் தேஸ்முக் இத்துடன் நான்கு படங்கள் இயக்கியுள்ளார். நான்கிலும் இம்ரான் ஹஸ்மிதான் ஹீரோ. இதில் அவருடன் பரேஷ் ராவெல், கே கே மேனன் போன்ற திறமைசாலிகளும் நடித்துள்ளனர்.