1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Geetha priya
Last Modified: புதன், 25 ஜூன் 2014 (19:00 IST)

அந்த கூட்டணி இப்போதும் அப்படியேதான் இருக்கு

2012 -ல் கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டுடண்ட் ஆஃப் த இயர் (Student Of The Year) திரைப்படம் பல விதங்களில் முக்கியமானது. கும்பலாக குடும்பங்களை காண்பித்து படம் எடுக்கிறவர் என்ற பெயரை கரண் ஜோஹரின் சினிமா சரித்திரத்திலிருந்து மாற்றிய படங்களில் இதுவும் ஒன்று. இன்னொன்று, மை நேம் இஸ் கான்.
ஸ்டுடண்ட் ஆஃப் த இயரின் இன்னொரு விசேஷம், இந்தப் படத்தில்தான் அலியா பட், வருண் தவான், சித்தார்த் மல்கோத்ரா ஆகியோர் அறிமுகமானார்கள். படப்பிடிப்பு நடக்கையில் திக் ப்ரெண்ட்ஸாக மாறிய இந்த மூவர் கூட்டணி இப்போதும் அப்படியேதான் உள்ளது.
 
மும்பையின் பொழுதுப்போக்கு ஏரியாக்களில் சித்தார்த் மல்கோத்ரா, வருண் தவான், அலியா பட் மூவரையும் அடிக்கடி பார்க்க முடிகிறது என்று மும்பை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் இந்த மூவர் கூட்டணி 2 ஸ்டேட்ஸ் இயக்குனர் அபிஷேக் வர்மனுடன் சேர்ந்து லூட்டி அடித்தது பாலிவுட்டின் பரபர செய்தி.
 
வருண் தவானும், அலியா பட்டும் தற்போது ஹம்ப்டி ஷர்மா கி துல்கனியா (Humpty Sharma Ki Dulhania) படத்தை புரமோட் செய்வதில் பிஸியாக உள்ளனர். சித்தார்த் மல்கோத்ராவின் புதிய படம் ஏக் வில்லன் இந்த வாரம் திரைக்கு வருகிறது.
 
இந்த மூவர் கூட்டணியின் நட்பு இனிவரும் நாள்களிலும் நீடிக்கும் என்றே தெரிகிறது.