வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 8 ஜூன் 2020 (11:01 IST)

சோகத்திற்கு மேல் சோகம்... 4 மாத கர்ப்பிணி மனைவியை விட்டு சென்ற நடிகர் சிரஞ்சீவி சார்ஜா...!

நடிகர் அர்ஜுனின் உறவினரான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா (39) நேற்று மதியம் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று மூச்சுத் திணறல் காரணமாக போராடியுள்ளார். உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுய நினைவு  இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு  ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. வளர்ந்து வந்த இளம் ஹீரோவின் மரணத்தை தற்போதுவரை அவரது நெருங்கிய நண்பர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதையடுத்து நடிகை பிரியாமனி, நடிகர் அல்லு சிரீஷ், குஷ்பு , கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உள்ளிட்ட பலரும் அவரது இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2018ம் ஆண்டு தமிழ் நடிகை மேக்னா ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். இந்நிலையில் மனைவி மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சிரஞ்சீவி சார்ஜா குழந்தையை பார்ப்பதற்கு முன்னரே மரணித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.