வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 22 ஏப்ரல் 2020 (10:02 IST)

முன்னணி நடிகரை அந்த இடத்தில் எட்டி உதைத்த வித்யா பாலன் - வைரலாகும் சண்டை வீடியோ!

பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகையான வித்யா பாலன் அஜித்தின்  நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுமானர். இதற்கு முன்னர் 2003ம் ஆண்டு வெளியான மனசெல்லாம் படத்திற்காக ஒப்பந்தமான வித்யாபாலனுக்கு நடிக்க தெரியவில்லை நீக்கிவிட்டு பின்னர் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தனர்.

அதையடுத்து தமிழ் சினிமா பக்கமே திரும்பாமல் தொடர்ந்து அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் நடித்து சூப்பர் ஹிட் நடிகையாக பெயர் பெற்றார்.  பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில்  ‘மிஷன் மங்கல்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்த போது அந்த படத்தின் ஹீரோ அக்ஷய் குமாருடன் சண்டை போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அக்ஷய் குமார் வித்யாவின் வயிற்றில் ஓங்கி குத்த.. வித்யா பதிலுக்கு அடிக்க கூடாத இடத்தில் எட்டி உதைத்துவிட்டார். வலி தாங்க முடியாத அக்ஷய் குமார் ஓரமாக போய் அமர்ந்துவிட சண்டையில் ஜெயித்த சந்தோசத்தில் ஆட்டம் போடுகிறார் வித்யா. ஜாலியாக எடுக்கப்பட்ட இந்த அடிதடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.