செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sinoj
Last Updated : சனி, 24 அக்டோபர் 2020 (19:56 IST)

சூர்யாவின் ''சூரரைப் போற்று'' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தை வெளியிட தடையில்லாச் சான்று பெறுவதில் தாமதம்  ஆன நிலையில் இன்று சூரரைப் போற்று படத்திற்கு தடையில்லாச் சான்று பெற்றுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், இப்படம் விமானம் சம்பந்தப்பட்டதால், இது குறித்து விமானப்படை அதிகாரிகள் பார்த்துச் சொல்வதற்குச் சில தாமங்கள் ஆகிறது. இது தேசத்தின் பாதுக்காப்பின் பொருட்டுத்தான். எனவே விரைவில் இப்படத்தில் டிரைலருடன் சந்திப்போம் என்று கூறி, இப்படத்தில் ஆகாசம் என்ற நட்புகுறித்த பாடலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று இப்படத்தின் டிரைலவர், அக்டோபர் காலை 10 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.