திங்கள், 8 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 25 ஜூலை 2020 (16:29 IST)

கடைசி வர அழவச்சுட்டீங்களே... சுஷாந்த் படத்தை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!

கடைசி வர அழவச்சுட்டீங்களே... சுஷாந்த் படத்தை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
பாலிவுட் உலகில் பிரபல இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் சில வாரங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பாக நடித்த படம் “தில் பேச்சாரா”. இந்த படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

The Fault in our Stars என்ற ஹாலிவுட் படத்தின் ரீ மேக்கான இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் கடந்த ஜுலை 24-OTTதளத்தில் ரிலீஸ் ஆனது. சுஷாந்தின் கடைசி படம் என்பதால் தில் பேச்சாரா மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

கடைசி வர அழவச்சுட்டீங்களே... சுஷாந்த் படத்தை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
குறிப்பாக ரஜினியின் ரசிகர்களை மிகவும் வருத்தமடைய செய்ததுடன் தலைவர் ரசிகர்கள் சுஷாந்த் படத்தை கொண்டாடி வருகின்றனர். காரணம், இந்த படத்தில் சுஷாந்த் ரஜினியின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். மேலும், ரஜினியை போல் ஒரு நல்ல நடிகராக ஆகவேண்டும் என்பது அவரது ஆசையாக உள்ளது. அதன் படி அவரது நண்பர் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் போன்று நடித்திருக்கிறார்.

கடைசி வர அழவச்சுட்டீங்களே... சுஷாந்த் படத்தை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
படத்தில் நான் ரஜினியை வணங்குகிறேன் என டயலாக் பேசுவதுடன் சுஷாந்த் பயன்படுத்தும் செல்போன் மற்றும் சுவருக்குள் முழுக்க ரஜினி படத்தையே ஒட்டி வைத்துள்ளார். ஏற்கவே இப்படி ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன வருத்தத்தில் இருந்து வரும் நேரத்தில் தில் பேச்சாரா படத்தில் ரஜினியின் ரசிகனாக நடித்துள்ளது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே ரஜினி ரசிகர்கள் சுஷாந்த் படத்தை கொண்டாடி வருகின்றனர்.