வியாழன், 21 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By J.Durai
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2024 (10:29 IST)

விக்யாத் இயக்கத்தில் "யுவர்ஸ் சின்சியர்லி ராம்"படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது!

கன்னட திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான 'மிஸ்டர் பர்ஃபெக்ட்' ரமேஷ் அரவிந்த் மற்றும் 'கோல்டன் ஸ்டார்' கணேஷ் ஆகிய இருவரும் 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. 
 
இந்த விழாவில் நடிகையும், தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர் விக்யாத்தின் மனைவி சுவாதி விக்யாத் கேமராவை ஆன் செய்ய, முதல் காட்சி படமானது.
 
ரமேஷ் அரவிந்த் மற்றும் கணேஷ் முதன்முறையாக இணையும் இந்த திரைப்படத்திற்கு 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' என பெயரிடப்பட்டுள்ளது. 
 
இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
 
இந் நிகழ்வில் ரமேஷ் அரவிந்த் பேசுகையில்.......
 
இயக்குநர் விக்யாத் ஏ. ஆர். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விக்யாத் 'புஷ்பக விமானம் ' எனும் திரைப்படத்தின் கதையை விவரிக்க வந்தபோது எனக்கு அறிமுகமானார். அந்த தருணத்திலிருந்து அவரின் முன்னேற்றத்தை நான் கண்டு வருகிறேன். அவருடைய கலை உணர்வை பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பில் வெளியான படங்களின் போஸ்டர்கள் மற்றும் டீசரில் ஒரு நுட்பமான.. உணர்வுபூர்வமான குணம் இருக்கிறது.  இறுதியில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்குவதை காணும் போது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது அவருக்கு அருமையான அனுபவமாகவும் இருக்கும்.‌
 
 'புஷ்பக விமானம்', 'மழைக்கால ராகம்' போன்ற படங்களை தயாரித்த விக்யாத், 'யுவர் சின்சியர்லி ராம்' எனும் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவருக்கு இயக்குநராக இது முதல் பயணம். இதில் நானும், கணேசும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ரமேஷ்- கணேஷ் கூட்டணி.. எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. சாண்டல்வுட்டின் பிரியத்துடன் பழகும் நடிகர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு... இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், எங்களின் ஆழமான நட்புறவு மற்றும் உற்சாகத்தையும் எதிரொலிக்கிறது'' என்றார். 
 
நடிகர் கணேஷ் பேசுகையில்......
 
கௌரி பண்டிகை நாளில் இது போன்ற அர்த்தமுள்ள திரைப்படத்தை தொடங்குவது தனி சிறப்பு. இந்த நாளில் எங்களின் 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' படத்தை அறிமுகப்படுத்துகிறோம். இந்த திரைப்படம் அழகான கதையம்சத்துடன் தயாராகிறது. இந்த திரைப்படம் பார்வையாளர்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். கதா பாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டது இந்த திரைப்படம். இப்படத்தின் திரைக்கதை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு காட்சியும் ஒரு அனுபவமாக இருக்கும். அற்புதமான நடிகரும், தொழில்நுட்ப கலைஞருமான ரமேஷ் அரவிந்த் உடன் இணைந்து பணிபுரிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பு.. எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இந்த திரைப்படத்தின் மூலம் விக்யாத் இயக்குநராக அறிமுகமாவதையும் நான் மனதார பாராட்டுகிறேன். இயக்குநர் விக்யாத்- உணர்வுபூர்வமான இயக்குநர். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.