தேங்காவை தொப்புள் மீது வீசுவது எப்படி கவர்ச்சியாகும்; தெலுங்கு இயக்குநரை கலாய்த்த டாப்ஸி


Abimukatheesh| Last Updated: திங்கள், 10 ஜூலை 2017 (16:59 IST)
பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய நடிகை டாப்ஸி தென்னிந்திய சினிமாவில் நடித்தது குறித்து பகிர்ந்துக்கொண்டார்.

 

 
பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி கே. ராகவேந்திர ராவ் இயக்கிய ஜும்மாண்டி நாதம் தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடிக்கத் துவங்கினார். தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 
 
கடந்த ஆண்டு வெளியான பிங்க் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட டாப்ஸியிடம் அவரது தென்னிந்திய சினிமா அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. தென்னிந்திய சினிமாவில் பெரும்பாலும் தொப்புள் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்றும் கூறப்பட்டது. 
 
அப்போது அவர் தனது முதல் படம் அனுபவம் குறித்து பகிர்ந்துக்கொண்டார். அவர் கூறியதாவது:-
 
எனது முதல் படத்தில் எனக்கு எடுத்தவுடன் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. நான் நடித்த முதல் படத்தின் இயக்குநர் பெரும்பாலும் அவர் அறிமுகப்படுத்திய நடிகைகளின் தொப்புகளில் பழம், பூ போன்றவற்றை வயிறு பகுதியில் போன்ற காட்சி இருக்கும். அதே போல் என் வயிற்றில் தேங்காவை வீசுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. தேங்காவை வயிற்றில் போடுவதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை என சிரித்தபடியே கூறினார்.
 
தற்போது அவர் பேசிய அந்த நிகழ்ச்சியின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :