1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By sinoj
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (18:04 IST)

சூர்யா ரசிகர் மன்றம் இளைஞர்களுக்கு வழிகாட்டி – போலீஸ் அதிகாரி புகழாரம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யாவின் 45 ஆவது பிறந்த தினம் இன்று. அதை முன்னிட்டி அவரது அடுத்தபடமான வாடிசால் போஸ்டர்  ரிலீஸ் செய்யப்பட்டது. பிரபல நட்சத்திரங்கள் முதற்கொண்டு பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்கள் சூர்யா பெயரில் ஹேஸ்டேக் உருவாக்கி டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்  நடிகர்  சூர்யா ரசிகர் மன்றம் இளைஞர்களுக்கு வழிகாட்டி  நெல்லை போலீஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன்  தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

அதில், நெல்லையில் திரைப்படங்கள் வெளியாகும் போது கட்அவுட், பேனர்கள் வைப்பதற்கு பதிலாக சமூகப் பணிகளை மேற்கொள்ளலாமென வலியுறுத்திய போது முதலில் பங்கெடுத்த இளைஞர்கள் நடிகர் சூர்யா நற்பணி மன்றத்தினர். இளைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டி வரும் சூர்யாவிற்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். #HappyBirthdaySuriya