வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (12:47 IST)

திரைப்படமாகும் சன்னி லியோன் வாழ்க்கை - சன்னி லியோனே நடிக்கிறார்

திரைப்படமாகும் சன்னி லியோன் வாழ்க்கை - சன்னி லியோனே நடிக்கிறார்

நீலப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் இப்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். இந்தியாவின் புதிய செலிபிரிட்டி அவர். அவரது வாழ்க்கை படமாகிறது. அதில் சன்னி லியோனே நடிக்கிறார்.



சன்னி லியோனின் வாழ்க்கையை இதற்கு முன்பும் படமாக எடுத்திருக்கிறார்கள். திலீப் மேத்தா என்பவர், மோஸ்ட்லி சன்னி பார்ட்லி கிளவ்டி என்ற பெயரில் சன்னி லியோனின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்தார். அது சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. அது ஆவணப்படம், எடுக்கவிருப்பது முழுநீள சினிமா.

தேரே பின் லேடன் படத்தை எடுத்த அபிஷேக் சர்மாதான் இந்த அரிய முயற்சியை முன்னெடுக்கிறார். சன்னி லியோனே நடிப்பதால் படத்துக்கு நம்பத்தன்மை கிடைக்கும்.

ஒரே குறை, சன்னியின் வாழ்க்கையை ஒளிவு மறைவில்லாமல் எடுக்க முடியாது என்பதே.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்