ஸ்ரீரெட்டி மீது வழக்கு தொடருவேன் - சுந்தர்.சி ஆவேசம்

angry
Last Modified திங்கள், 16 ஜூலை 2018 (11:32 IST)
ஸ்ரீரெட்டி தன் மீது கூறியுள்ள புகார்கள் அனைத்தும் பொய்யானவை எனவும் அவர்மீது வழக்கு தொடருவேன் எனவும் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
 
இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், மேலும் நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார். அந்த வரிசையில் குஷ்புவின் கணவரும் மற்றும் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி ஸ்ரீரெட்டியின் லிஸ்டில் சிக்கியுள்ளார்.
 
ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில், ஹைதராபாத்தில் அரண்மனை படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற போது அந்த படத்தின் நிர்வாக இயக்குநர் கணேஷ் என்னை அந்த படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்தார். நானும் அங்கே சென்றேன். அவர் சுந்தர்.சி யிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அங்கே எனது நண்பரான கேமராமேன் செந்தில்குமாரை சந்தித்தேன். 
reddy
அப்போது சுந்தர்.சி அவரின் அடுத்த படத்தில் எனக்கு முக்கிய கதாபாத்திரம் தருவதாக உறுதியளித்தார். அடுத்த நாள் என்னை சுந்தர்.சி அழைத்து அடுத்த படத்தில் சான்ஸ் வேண்டுமென்றால் என்னை காம்ப்ரமைஸ் செய்ய வேண்டும் என்றார். அதன் பிறகு என்ன நடந்ததென்று அந்த பெருமாளுக்கு தெரியும் என பெரிய குண்டை சுந்தர்.சி மீது போட்டிருந்தார் ஸ்ரீரெட்டி.
sundar
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சுந்தர்.சி, ஸ்ரீரெட்டி கூறியதில் சிறிதளவும் உண்மை இல்லை. என் மீது அபாண்டமாக பழி சுமத்தி இருக்கிறார். எனது பெயரை கலங்கப்பத்த இப்படி செய்த ஸ்ரீரெட்டி மீது வழக்கு தொடர்ந்து, அவர் மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுப்பேன் என சுந்தர்.சி ஆவேசமாக தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :