வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (13:27 IST)

அமிதாப் பச்சன் பேரனை காதலிக்கும் ஷாருக்கான் மகள் - கோர்த்து வைத்த பெருசுங்க!

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் நிகில் நந்தா என்ற தொழிலதிபரை கடந்த 1997ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு நவ்யா என்ற மகளும் அகஸ்டியா என்ற மகனும் இருக்கின்றனர். 
 
22 வயதாகும் மகன் அகஸ்டியா பிரபல பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கானின் மகள் சஹானா கானை காதலிப்பதாக செய்திகள் அவ்வப்போது வெளியானது. தற்போது இவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதாகவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 
இருவீட்டிலும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் அகஸ்டியா வீட்டின் கிறிஸ்துமஸ் விருந்தில் சஹானா கலந்துக்கொண்ட போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இவர்கள் இருவரையும் காதலிக்க வைத்ததே வீட்டின் பெரியவர்கள் தானாம். கான் குடும்பமும் பச்சன் குடும்பமும் சேர்ந்து டான் குடும்பமாக போகிறது.