வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (07:59 IST)

அதுக்குள்ளவா...? குழந்தை பொறந்து ஒரு மாசம் தானே ஆகுது - மீண்டும் மகிழ்ச்சி அடைந்த ஸ்ரேயா கோஷல்!

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இந்திய சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இம்ரான் ஹாஸ்மி, ஷங்கர் மகாதேவன், தேவி ஸ்ரீபிரசாத் ஹாரிஸ் ஜெயராஜ், டி,இமான் உள்ளிட்ட இசையமைப்பாளரின் இசையில் அதிகப் பாடல் பாடியுள்ளார்.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி என பல மொழி படங்களுக்கு பாடல் பாடி நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரேயா கோஷல் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ஷிலாதித்யா முகோபாத்யாயவை திருமணம் செய்துக்கொண்டார்.

இதையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகிறது அதற்குள் ஷ்ரேயா நீச்சல் குளத்தில் கவலை மறந்து ஆட்டம் போட்ட புகைப்படத்தை வெளியிட்டு " ஒரு மகிழ்ச்சியான தருணம். இது பிப்ரவரியில்... நான் இந்த குளத்தில் மிதந்து கொண்டிருந்தபோது, என்னுள் தேவ்யான் மிதந்து கொண்டிருந்தான்." என கேப்ஷன் கொடுத்து throwback புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இருந்தாலும் இந்த புகைப்படத்தை பார்த்ததும், " இப்போ தானே பாப்பா பொறந்துச்சு அதுக்குள்ள இப்படி கும்மாளமா " என எல்லோரும் செம ஷாக்காகி விட்டனர்.