Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சினிமாவில் அறிமுகமாகும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா


Abimukatheesh| Last Updated: புதன், 21 ஜூன் 2017 (17:06 IST)
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிரபல பாலிவுட் நடிகர் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 
சானியா மிர்சா இரட்டையர் மகளிர் டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இவர் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த தகவலை பாலிவுட் முன்னணி நடிகர்களின் ஒருவரான ஃப்ர்ஹான் அக்தர் தெரிவித்துள்ளார். விரைவில் சானியா மிர்சாவை படத்தில் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். ஆனால் அவர் சின்ன கதாப்பத்திரத்தில் நடிப்பாரா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்பது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.
 
படங்களில் நடிக்கும் முன்பே அவருக்கு இந்தியா முழுவதும் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :