1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (15:32 IST)

ஐந்தே தினங்கள்... 100 கோடியை தாண்டிய சல்மானின் கிக்

தெலுங்கு கிக் படத்தின் ரீமேக்கான இந்தி கிக் ஐந்தே தினங்களில் இந்தியாவில் 127 கோடிகளை வசூல் செய்து 100 கோடி கிளப்பில் ஜம்மென்று நுழைந்துள்ளது.
பாலிவுட்டைப் பொறுத்தவரை கலெக்ஷன் கிங் என்றால் சல்மான் கான்தான். மற்ற கான்கள் முக்கி முனகி இரண்டு வருடத்துக்கு ஒரு படம் நடித்து இருநூறு கோடி வசூலிக்கும் போது வருடத்துக்கு இரண்டு சல்மான் படங்கள் அனாயாசமாக 100 கோடியை தாண்டுகிறது.
 
தோல்வியடைந்ததாக கூறப்பட்ட சல்மானின் ஜெய்ஹோ படமே 116 கோடிகள் சம்பாதித்தது, அதுவும் இந்தியாவில் மட்டும். கிக் படம் முதல் ஐந்து தினங்களில் 127 கோடிகளை கடந்துள்ளது. நேற்றுவரை 148 கோடிகள் வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
கிக் படத்துடன் 7 நூறு கோடி படங்களுடன் 100 கோடி கிளப்பின் முன்னணி உறுப்பினராக இருக்கிறார் சல்மான். ஷாருக்கானும், அஜய்தேவ்கானும் இரண்டாவது இடத்தில். தலா 4 படங்கள். அமீர் கான், அக்ஷய் குமார், ரிதேஷ் தேஸ்முக் மூவரும் 3-வது இடத்தில். மூவரும் தலா மூன்று படங்கள்.
 
சல்மானை இந்த விஷயத்தில் முறியடிக்க மற்ற கான்கள் தலைகீழாக நின்றாலும் முடியாது என்பதே இன்றைய நிலைமை.