1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2015 (13:10 IST)

ஏக்தா பூர் படத்தில் சஸ்பெக்ட் எக்சாகும் சைஃப் அலிகான்

சைஃப் அலிகான் நடிப்பில் வெளிவந்த, ஹம்சகல்ஸ், ஹேப்பி என்டிங் இரண்டும் சுமாராகப் போனது. அதற்கு முன் அவர் நடித்தப் படங்களும் அப்படியே. சுமார் இல்லை என்றால் பிளாப்.
 

 

 
இந்நிலையில் ஏக்தா கபூரின் பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் மூன்று படங்களில் நடிக்க, சைஃப் அலிகானுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதில் முதல் படம், டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற ஜப்பான் மொழி நாவலை தழுவி எடுக்கப்படும் படம். 
 
இந்த நாவலைத் தழுவி ஜப்பான் மற்றும் கொரியாவில் சின்னச் சின்ன வித்தியாசங்களுடன் படங்கள் எடுக்கப்பட்டன. இதன் சாயலில் உருவானதுதான் த்ரிஷ்யம் படமும்.
 
ஜப்பான் நாவல் இந்தியில் படமாக்கப்படும் நிலையில், அதன் சாயலில் உருவான த்ரிஷ்யம் படமும் இந்தியில் ரீமேக்காகிறது.
 
ஏக்தா கபூர் சைஃப் அலிகானை வைத்து தயாரிக்கும் முதல் படத்தை சுஜாய் கோஸ் இயக்குகிறார்.