வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Modified: சனி, 27 மே 2017 (17:10 IST)

ஆர்வக்கோளாறில் மண்டையை உடைத்துகொண்ட பிரபல பாலிவுட் நடிகர்

பத்மாவதி படத்தின் படப்பிடிப்பில் ரன்வீர் சிங் தனது மண்டையை உடைத்துக்கொள்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நடித்த ரன்வீர் தலையில் உண்மையிலே காயம் ஏற்பட்டது. 


 

 
பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தற்பொது பத்மாவதி என்ற படத்தை இஅயக்கி வருகிறார். இதில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. 
 
இதில் ரன்வீர் சிங் தானாக தனது மண்டையை உடைத்து கொள்வது பொன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நடித்த ரன்வீர் சிங் தலையில் உண்மையிலே காயம் ஏற்பட்டது. காட்சி முடிந்து இயக்குநர் கட் சொன்ன பிறகே அனைவரும் ரன்வீர் தலையில் ரத்தம் வருவதை பார்த்துள்ளனர். 
 
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தலையில் காயமடைந்த அவருக்கு தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.