Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரன்பீர் கபூருக்கு அம்மாவான மனிஷா கொய்ரலா

Sasikala| Last Modified வெள்ளி, 10 மார்ச் 2017 (12:27 IST)
‘தத்’ என்ற பாலிவுட் படத்தில், ரன்பீர் கபூருக்கு அம்மாவாக நடிக்கிறார் மனிஷா கொய்ரலா.

 
நடிகரும், அரசியல்வாதியுமான சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறைப் படமாக எடுக்கிறார் ராஜ்குமார் ஹிரானி. இந்தப் படத்தில்,  சஞ்சய் தத்தாக நடிக்கிறார் ரன்பீர் கபூர். அவருடைய தந்தை சுனில் தத்தாக பரேஷ் ராவல் நடிக்க, அவருக்கு ஜோடியாக  நடிக்கிறார் மனிஷா. 
 
அதாவது, சஞ்சய் தத்தின் அம்மாவும், பிரபல பாலிவுட் நடிகையுமான நர்கீஸ் வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடத்தில் நடிப்பது  எனக்குப் பெருமை என்று குறிப்பிட்டுள்ள மனிஷா, அவர் படங்களுக்காக ரசிகர்கள் எப்போதுமே அவரை நினைவில்  வைத்திருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில், ‘தத்’  முன்னிலை வகிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :