வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Modified: வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (10:33 IST)

ஏக்கத்தில் தவிக்கும் ரகுல் ப்ரீத் சிங்! அதிரடி முடிவு

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.  இவர் தமிழில் தீரன் அதிகாரம் படம் மூலம் பிரபலமானார். தற்போது அவர்  தமிழில் என்ஜிகே, கார்த்தி 17, எஸ்கே 14 மற்றும் தெலுங்கில் என்டிஆர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
அவருக்கு  உறவுகளை பிரிந்து பல நாட்கள் ஷுட்டிங்கி இருப்பதால்,  வீட்டு ஞாபகத்தில் ஏங்கி தவிக்கிறார். இதனால் நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட ரகுல் ப்ரீத் சிங் முடிவு செய்துள்ளார்.
 
இது குறித்து அவர் பேசுகையில்,  'நடிப்பின் மீது எனக்கு தீராத காதல் உள்ளது. ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறேன். தற்போது உள்ள படங்களை முடித்த பிறகு சிறிய இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளளேன்.
 
சிறிது புத்துணர்ச்சிக்காக வீட்டில் நேரத்தை செலவிட உள்ளேன். வீட்டு ஞாபகம் அடிக்கடி வந்து அவதிப்படுகிறேன். வீட்டு சாப்பாடு சாப்பிடுவதற்காக இனியும் காத்திருக்க முடியாது ' என்று தெரிவித்துள்ளார்.