ஏஞ்சலினா ஜோலியை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா சோப்ரா


Abimukatheesh| Last Updated: சனி, 8 ஏப்ரல் 2017 (21:01 IST)
ஹாலிவுட் திரையுலகில் பிரபலமடைந்துள்ள நிலையில் பிரியங்கா சோப்ரா அண்மையில் பிரபல இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில், உலகின் அழகான பெண்கள் பட்டியலில் பிரியங்கா இரண்டாம் இடம் பிடித்தார். 

 

 
2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா 2002 ஆம் ஆண்டு தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்தார். பின் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையானார். தற்போது ஹாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
 
ஹாலிவுடில் பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார். அண்மையில் பிரபல இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் உலகில் அழகிய பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
 
இதன்மூலம் ஹாலிவுட்டின் பிரபல நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி மற்றும் எம்மா வாட்ஸ்ன் ஆகியோரை பின்னுக்கு தள்ளினார்.
 
இவர் நடித்த முதல் ஹாலிவுட் படம் இன்னும் வெளிவராத நிலையில் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :