வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (15:31 IST)

பிரியங்கா மட்டுமா... வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற பாலிவுட் பிரபலங்கள்!!

பிரசவத்திற்காக வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்த மற்ற பாலிவுட் பிரபல ஜோடிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். 

 
ஷாருக்கான் - கௌரி கான்: 
ஷாருக்கான் மற்றும் கௌரி கான் ஆகியோர் 2013 இல் வாடகைத் தாய் மூலம் தங்கள் இளைய மகன் அபிராமுக்கு பெற்றோராக ஆனார்கள். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆர்யன் என்ற மகனும், சுஹானா என்ற மகளும் உள்ளனர். 
 
அமீர் கான் - கிரண் ராவ்: 
அமீர் கான் மற்றும் கிரண் ராவ் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு ஐவிஎஃப் மூலம் தங்கள் மகன் ஆசாத்தை வரவேற்றனர். 
 
ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா: 
ஷில்பா ஷெட்டியும் ராஜ் குந்த்ராவும் 2020 ஆம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் அவர்களது இரண்டாவது குழந்தையான சமிஷா என்ற பெண் குழந்தையைப் பெற்றனர்.
 
ப்ரீத்தி ஜிந்தா - ஜீன் குட்எனஃப்:
ப்ரீத்தி ஜிந்தா மற்றும் அவரது கணவர் ஜீன் குட்எனஃப் வாடகைத் தாய் மூலம் இரட்டையர்களான ஜெய் ஜிந்தா குட்எனஃப் மற்றும் ஜியா ஜிந்தா குட்எனஃப் ஆகியோருக்கு நவம்பர் 2021 பெற்றோர் ஆனார்கள். 
 
ஃபரா கான் -  ஷிரிஷ் குந்த்: 
பிப்ரவரி 2008 ஆம் ஆண்டு கணவர் ஷிரிஷ் குந்தருடன் மூன்று குழந்தைகளைப் பெற்றபோது நடன இயக்குனர் ஃபரா கானுக்கு வயது 43. அப்போதிருந்து, குழந்தைகளைப் பெற முயற்சிக்கும் தம்பதிகளுக்கு வாடகைத் தாய் பிரசவம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
 
கரண் ஜோஹர்: 
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்த பிறகு, யாஷ் மற்றும் ரூஹியை கரண் ஜோஹர் தனது வாழ்க்கையில் வரவேற்றார். 2017 பிப்ரவரியில் இவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 
 
துஷார் கபூர்: 
கரண் ஜோஹர் போல துஷாரும் ஒற்றை தந்தை. அவர் ஜூன் 2016 இல் வாடகைத் தாய் மூலம் தனது ஆண் குழந்தை லக்ஷ்யாவை வரவேற்றார். ஜீதேந்திரா மற்றும் ஷோபா கபூரின் முதல் பேரக்குழந்தை லக்ஷ்யா.
 
ஏக்தா கபூர்: 
தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஜனவரி 2019 இல் வாடகைத் தாய் மூலம் தனது மகன் ரவிக்கு ஒற்றைத் தாயானார்.